வகுப்பறை சீர்செய்யப்பட்டது
எமது கல்லூரியின்
தரம் 6,8 வகுப்பறைகள் இதுவரைகாலமும் நிலம் போடாததன் காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும்
பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர். மாணவர்களினதும் ஆசிரியர்களதும் பாதணிகளில்
தூசிபடிவதும், காற்றுக்காலங்களில் வகுப்பறையில் இருந்து கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில்
முற்றாக ஈடுபடமுடியாத சூழ்நிலையும் இங்கு காணப்பட்டது.

தற்போது பாடசாலையின் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் போன்றோரின் உதவியினால் அவ்வகுப்பறைகளிற்கு சீமேந்தினால் நிலத்தினைப் போட்டு ஆசிரியர்களதும் மாணவர்களினதும் துன்பம் தீர்க்கப்பட்டுள்ளது. இதில் நிதியுதவி வழங்கிய பழையமாணவரில் திரு தி.நரேந்திரநாதன் என்பவரின் பங்கு முக்கியமானது.
No comments:
Post a Comment