Thursday, May 30, 2013

ஆரம்பப்பிரிவு மாணவமுதல்வர்களுக்கான சின்னம்சூட்டும் விழா 2013

எமதுகல்லூரியின் (ஆரம்பப் பிரிவு) 2013 ம் ஆண்டுக்கான மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் விழா 31.05.2013 அன்று அதிபர் திரு சு.கிருஸ்ணகுமார் தலைமையில்  ஆரம்பப் பிரிவு அரங்கத்தில் காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது















Tuesday, May 21, 2013

வகுப்பறை சீர்செய்யப்பட்டது

எமது கல்லூரியின் தரம் 6,8 வகுப்பறைகள் இதுவரைகாலமும் நிலம் போடாததன் காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர். மாணவர்களினதும் ஆசிரியர்களதும் பாதணிகளில் தூசிபடிவதும், காற்றுக்காலங்களில் வகுப்பறையில் இருந்து கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் முற்றாக ஈடுபடமுடியாத சூழ்நிலையும் இங்கு காணப்பட்டது.

























தற்போது பாடசாலையின் பழையமாணவர்கள் நலன்விரும்பிகள் போன்றோரின் உதவியினால் அவ்வகுப்பறைகளிற்கு சீமேந்தினால் நிலத்தினைப் போட்டு  ஆசிரியர்களதும் மாணவர்களினதும் துன்பம் தீர்க்கப்பட்டுள்ளது. இதில் நிதியுதவி வழங்கிய பழையமாணவரில் திரு தி.நரேந்திரநாதன் என்பவரின் பங்கு முக்கியமானது.






Thursday, May 16, 2013

மாணவமுதல்வர்களுக்கான சின்னம்சூட்டும் விழா- 2013

எமதுகல்லூரியின் 2013 ம் ஆண்டுக்கான மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் விழா 17.05.2013 அன்று அதிபர் திரு சு.கிருஸ்ணகுமார் தலைமையில்  கல்லூரி அரங்கத்தில் காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது. இவ்விழாவிற்கு எமது  கல்லூரியின் முன்னை நாள் அதிபரும் தற்போதைய பழையமாணவர் சங்கத் தலைவருமாகிய திரு ச.தில்லையம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.















இவ்விழாவில் பின்வரும் மாணவர்கள்  மாணவ முதல்வர்களாகத் தெரிவுசெய்யப்பட்டு பிரதம விருந்தினர்களால் சின்னம் சூட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர்.


செல்வன் விஸ்வலிங்கம் நித்தியானந்தம், செல்வன்  சிவஞ்ஞானமூர்த்தி கௌதமன், செல்வன் சுந்தரராஸ் நரேஸ், செல்வன் ராசமூர்த்தி செந்தூரராஜ், செல்வன் அரிபரநிதி ஜெயகரன், செல்வன் கனகவேல் மகனீஸ், செல்வன் சந்திரசேகரம் நிசாந், செல்வன் ஜெயபாஸ்க்கரன் அனந்தகுமார், செல்வன் ஜெகநாதன் ராஜேந்தர், செல்வன் முத்துசாமிகுருநாதக்குருக்கள் கெங்கதாஸ், செல்வன் சிவலிங்கம் நிலக்ஜன், செல்வன் சின்னத்துரை அஜித், செல்வன்  ரவிந்திரன் கீர்த்தனன், செல்வன் கனகலிங்கம் சிவதுஷன், செல்வன் மோகன் ஹரிலக்மன், செல்வன் கணேசமூர்த்தி செந்தூரன், செல்வன் பாலச்சந்திரன் பிரணவன், செல்வன் செல்வக்குமரன் துவாரகன்,  செல்வன் ஆனந்தகுமார் மதிசுதன், செல்வன் தில்லைநடராசா தர்சன், செல்வன் கணேசமூர்த்தி தரன், செல்வன் கனகலிங்கம் தனுஜன்,  செல்வன் இரத்தினகுமார் லக்ஸ்மன், செல்வன் இராசதுரை ஜனகன், செல்வி சுமித்திரா இராசையா, செல்வி ஜோதிகா பிரேமச்சந்திரன், செல்வி லாவண்ணியா கனகராசா, செல்வி செல்வநந்தினி சின்னத்துரை, செல்வி நிதர்சினி தங்கராசா, செல்வி பாமதி இரத்தினசிங்கம், செல்வி சகானா ஜெயரூபன், செல்வி லக்ஸியா இராமகிருஷ்ணன், செல்வி வான்மதி ரூபேஸ்குமார், செல்வி அபர்ணா இராசலிங்கம், செல்வி ஜெயதாரணி ஐயாத்துரை, செல்வி சத்தியப்பிரபா சத்தியராதன்.















Tuesday, May 14, 2013

இன்று எமது பாடசாலக்கான புதிய இணையத்தளம் ஒன்றை பரீட்சார்த்தமாக இயக்கியுள்ளோம்
wel come to uduppiddy american mission college